சினிமா செய்திகள்
யுவன் இசையில் பொம்மை படத்தின் முதல் பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்
சினிமா செய்திகள்

யுவன் இசையில் 'பொம்மை' படத்தின் முதல் பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்

தினத்தந்தி
|
27 Jan 2023 10:29 PM IST

‘பொம்மை’ படத்தில் இருந்து ‘முதல் முத்தம்’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று வெளியிட்டார்.

சென்னை,

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் 'பொம்மை' திரைப்படத்தின் முதல் பாடலான 'முதல் முத்தம்' பாடல் இன்று வெளியாகும் என்றும் அதனை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 'பொம்மை' படத்தின் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


மேலும் செய்திகள்